
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை 5 நாட்களுக்கு நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், இராஜாங்க அமைச்சரின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சார்பில் ஆஜரான சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.