
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இன்று (15) இதனைத் தெரிவித்தார்.