
நிதி முறைகேடுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதற்கு மேலதிகமாக இந்த நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஜானகி சிறிவர்தனவுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 226 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் திலினி பிரியமாலி நேற்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.