
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
மேலும், தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சூழலை பிள்ளைகளுக்குத் தயார்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, நாளை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பிள்ளைகள் நிம்மதியான நாளைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தையும் சிரேஷ்ட புலமைப்பரிசில் போதகர் சரத் ஆனந்த குரு சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கடந்த ஆண்டுகளை விட நாளை நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை நாளை காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். காலை 09:30 முதல் 10:45 மணி வரை, இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க நேரம் ஒதுக்கப்படும்.
அத்தோடு, அரை மணி நேர இடைவெளிக்குப் பிறகு 11:15 மணிக்கு முதல் வினாத்தாள் வழங்கப்படும். முதலாம் வினாத்தாள் விடைகளை எழுதுவதற்கு நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஒரு மணித்தியால அவகாசம் வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.