
மனித உரிமை செயற்பாட்டாளரான சிரந்த அமரசிங்க, தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மேலும், கடந்த 28ஆம் திகதி சட்டத்தரணி நாகாநந்த கொடித்தூவுக்கு நடாத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு அறிக்கையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மனுதாரர்தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கடந்த ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தம்மை கைது செய்ய பொலிஸார் தேடி வருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிரந்த அமரசிங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்பாடி, சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளின் தில்ருக் மற்றும் கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு குடித்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.