
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
,மேலும், புதிய கூட்டணியின் கீழ் நியமனச் சபைகளை நியமிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்தோடு, இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.