
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் நடைபெற்ற “2022 தேசிய சிறப்பு விருது வழங்கும் விழாவில்” கலந்து கொண்ட ஜனாதிபதி, நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் முக்கிய பங்குதாரர்களான தொழில்துறையினரை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அத்தோடு, உடைந்த பொருளாதாரத்தை பார்த்து வருந்துவதை விடுத்து, சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானும் ஜெர்மனியும் எவ்வாறு மீண்டும் கட்டமைக்கப்பட்டன என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக. தற்போது வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் தொழில்துறையினருக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காடினார்.
இதேவேளை, உலகின் பிற நாடுகள் பயன்படுத்திய நவீன தொழில் நுட்பத்தை நமது சிறு, நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த பாடுபட வேண்டும் என்றும் அதற்கு அரசாங்கம் வழங்கக்கூடிய அனைத்து ஆதரவையும் வழங்கத் தயார் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.