
02 T56 தோட்டாக்கள் அடங்கிய பார்சலை கத்தோலிக்க தேவாலயத்திற்கு காணிக்கையாக வழங்கிய சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றிரவு மாதம்பே கத்தோலிக்க மேசமையில் உள்ள 8 தேவாலயங்களில் நத்தார் வழிபாடுகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்பின், பக்தர்கள் காணிக்கை செலுத்திய பின்னர் திருப்பலி நிறைவடைந்ததும், காணிக்கையாகப் பெறப்பட்ட அனைத்தும், மாதம்பை மீசையிலுள்ள பிரதான தேவாலயமான புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது அவ்வாறு கொண்டு சென்ற பார்சல்களில் வழக்கத்திற்கு மாறான பார்சல் இருந்தமையினால் குறித்த பரிசலை ஆய்வு செய்துள்ளனர்.
மேலும், குறித்த பொதியில் 02 T56 தோட்டாக்கள் மற்றும் நகைகளை எடைபோடுவதற்கு பயன்படுத்தப்படும் சிறிய தராசுகள் 08 காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தோட்டாக்கள் எந்த தேவாலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு கின்றது.