
மாவனெல்லையில் இருந்து ஹெம்மாதகம ஊடாக கம்பளைக்கு செல்லும் பிரதான வீதி முக்கால்வாய் பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளது.
மேலும், மோசமான வானிலையுடன் வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ஆபத்தான சூழ்நிலையை கருத்திற் கொண்டு பொலிஸார் பல வாகனங்களை வழிமறித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, மாவனல்லையில் இருந்து கம்பளை, நாவலப்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் குறுகிய பாதையாக ஹெம்மாதகம, கம்பளை வீதி பயன்படுத்தப்படுவதாக எமது குருடிவி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.