
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மீண்டும் ஒரு தடையை தலிபான்கள் விதித்துள்ளனர்.
அதன்படி, தலிபான் அரசின் பொருளாதார அமைச்சர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி, பெண்களை வேலைக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், அந்த உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு நாட்டில் தடை விதிக்கப்படும் என்றும் தலிபான் அரசு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்க்கு காரணமணமாக இஸ்லாமிய சட்டத்தை மீறி பெண்கள் ஆடைகளை பயன்படுத்தியதால், உரிய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தானில் நிறுவப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, பெண்களின் உரிமைகளை மீறுவதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தலிபான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் பல்கலைக்கழக கல்வி கற்க தலிபான் அரசு சமீபத்தில் தடை விதித்தமையும் குறிப்பிடதக்கது.