
கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம் தற்போது வடிந்துள்ள நிலையில் ரயில் நிலையத்தினை துப்புரவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், பல பகுதிகளில் நீர் வடிந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.