
தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் உட்பட 75 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, “தினேஷ் ஷாஃப்டாரின் கொலை தொடர்பாக, பொலிஸார் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்படுகின்தாகவும்” மேலும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, “விசாரணை இன்னும் நடைபெற்று வருவதோடு, இவற்றின் மூலம் 75க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் மூலம் கிடைத்தாகவும், புதிய தகவல்களின் அடிப்படையில் மேலும் ஆதாரங்கள் தேடப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை, இது தொடர்பாக எந்த சந்தேகமும் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை. அவர் மேலும் தெரிவித்தார்.