
அமெரிக்காவில் இருந்து பொம்மைகள் என்ற போர்வையில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பொம்மைகள் அடங்கிய பார்சல்களில் கவனமாக பொதி செய்யப்பட்ட சுமார் 01 கிலோ 367 கிராம் குஷ் போதைப்பொருள் கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, பொதிகளை எடுத்துச் செல்ல வந்த கொழும்பு 14 ஐச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, இந்த கைதினை விசேட அதிரடிப்படையின் தலைமையக முகாமில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.