
ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு பாடசாலை மாணவர்கள் அதிகளவு அடிமையாகியுள்ளதாக வெளியான தகவல்களின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை சிகரெட், புகையிலை மற்றும் மதுபானங்களின் பாவனை குறைந்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக வெளியிடப்படும் அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாடசாலை மாணவர்கள் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.