
போதைப்பொருள் சம்பந்தமாக பாடசாலை மாணவர்களின் பைகளைச் பரிசோதிக்கும் போது, அது தொடர்பான குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால் மாத்திரமே பாடசாலை மாணவர்களை பரிசோதிக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.