
ஜோர்தான் ஊடாக வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் மற்றுமொரு மனித கடத்தல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், அண்மைய நாட்களில் சுற்றுலா விசாவில் இலங்கையர்கள் குழுக்களாக வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து அந்த பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் படி இது தெரியவந்துள்ளது.
அத்தோடு, இது தொடர்பில் தகவல்களைக் கேட்டபோது, தாம் ஜோர்தானுக்கான குறுகிய விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக உரியவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், 10 வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஜோர்டானுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டில் சிக்கியுள்ளதாக ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.