முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் தனது 95 வயதில் இன்று காலமானதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
மேலும், முன்னாள் போப் 16ம் பெனடிக்ட், உடல்நிலை மோசமடைந்ததால், 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பதோடு எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடையமாகும்.
அத்தோடு, வத்திக்கானில் உள்ள Mater Ecclesiae மடாலயத்தில் போப் 16ம் பெனடிக்ட் தனது இறுதி நாட்களை கழித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.