
கஞ்சிபான இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த நபர்அண்மையில் இலங்கை நீதிமன்றத்தினால் பிணை வழங்கபட்டிருந்த நிலையில் கடல் வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, கஞ்சிபான இம்ரான் ராமேசுவரத்துக்குள் நுழைந்ததாக தமிழக உளவுத்துறையினர் தமிழக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி, கஞ்சிபான இம்ரானைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை இந்தியா பொலிஸார் கரையோரப் பகுதியில் ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும், செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், கடந்த 25ம் தேதி தலைமன்னாரில் இருந்து கஞ்சிபன இம்ரானும் அவரது நெருங்கிய நண்பன் ஒருவரும் ராமேசுவரத்துக்குள் நுழைந்ததாக தமிழக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதோடு,கொலை மற்றும் கொலை குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த கஞ்சிபான இம்ரான் 2019 ஆம் ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கஞ்சிபான இம்ரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதன்பிறகு, டிசம்பர் 20ஆம் திகதி பிணையில் விடுதலை பெற்ற கஞ்சிபன இம்ரான் தமிழகத்துக்குத் தப்பித்து வந்துள்ளதாக இந்தியப் புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அதன்படி, இந்த விவகாரம் குறித்து அவர்கள் கண்காணித்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் கஞ்சிபான இம்ரான் என தமிழக புலனாய்வு அமைப்புக்களை மேற்கோள்காட்டி இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.