
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவைக்கும் பத்தேகமவுக்கும் இடையில் 88 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்றமையினால் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், விபத்தில் காயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு காயமடைந்தவர்களில் 11 ஆண்கள், 04 பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, கதிர்காம யாத்திரைக்கு சென்று திரும்பிய மத்துகம பெலவத்த பிரதேசத்தை சேர்ந்த குழுவினரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்,