
புத்தாண்டில் அரச சேவைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு பொதுப்பணித்துறை உறுதிமொழியும், ஒரே நேரத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் காலை 9 மணிக்கு இதே உறுதிமொழி வழங்கப்பட்டது.
மேலும்.நாட்டை கடன் பொறியில் இருந்து காப்பாற்றி பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்த வருடம் மிகவும் முக்கியமான ஆண்டாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரச உத்தியோகத்தரின் கடமையானது ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் அல்லது வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வருவதே தமது நம்பிக்கை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும்,தெரிவித்துள்ளார்.