
தம்புள்ளை விகாரை சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர் தம்புள்ளை பிரதேசத்தில் சில காலமாக பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, குறித்த கேரள கஞ்சா யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.