
உக்ரேனில் யுத்தம் ஆரம்பமாகி இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றன.
அதன்படி, உக்ரைன் போரின்போது பெரும் போர்க்களமாக இருந்த டான்பாஸ் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் நேற்று வெளியிட்டது. இந்த தாக்குதலில் சுமார் 300 ரஷ்ய வீரர்கள் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்து வருவதாக உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், உக்ரைனின் இந்த அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, உக்ரைனின் தாக்குதல்களில் தனது இராணுவத்தைச் சேர்ந்த 63 உறுப்பினர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ள போதிலும் இரு தரப்புக்கும் இடையே இன்னும் கடுமையான மோதல்கள் நிலவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இவ்வாறானதொரு பின்னணியில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தொடர் தாக்குதல்களை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி கூறுகையில், இந்த விவகாரம் குறித்து தனக்கு உளவுத்துறை தகவல் கிடைத்துள்ள தெரிவித்தார்.
அத்தோடு, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. கடந்த 02 நாட்களில் தாக்குதலுக்காக வந்த ஈரானில் தயாரிக்கப்பட்ட 80 ஆளில்லா விமானங்களை அழித்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.