
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில், திறைசேரியுடன் இணைந்த தாய் நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் பேசிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன.
02ஆம் தரத்திலிருந்து 11ஆம் தரம் வரையிலான மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக, ஒரு வகுப்பில் சேரக்கூடிய அதிகபட்ச மாணவர் எண்ணிக்கை அடங்கிய சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் வெளியிடப்பட உள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.