
மது மற்றும் சிகரெட்டின் விலையானது இன்று (03) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு போத்தல் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
,மேலும், மதுபான போத்தல் ஒன்றிற்கு அறவிடப்பட்ட 1050 ரூபா வரி 1256 ரூபாவாகவும், 1121 ரூபா வரி 1344 ரூபாவாகவும், 1309 ரூபா வரி 1576 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பீர் போத்தல் ஒன்றிற்கு அறவிடப்பட்ட 103 ரூபா வரி 124 ரூபாவாகவும் 194 ரூபா வரி 233 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிகரெட் வரியும் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 90 ரூபாவாக இருந்த சிகரெட் ஒன்றின் புதிய விலை 105 ரூபாவாகும்.
85 ரூபாயாக இருந்த சிகரெட்டின் புதிய விலை 100 ரூபாயாக இருப்பதோடு, 70 ரூபாவிற்கு விற்கப்பட்ட சிகரெட்டின் புதிய விலை 80 ரூபாவிற்கு உயரத்தப்பட்டுள்ளது.