
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளருக்கு 1,500 ரூபாயும், சுயேச்சைக் குழுவின் வேட்பாளருக்கு 5,000 ரூபாயும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் குறித்தும் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நாளை வியாழக்கிழமை (5) முதல் ஜனவரி 23 ஆம் திகதி (நண்பகல் 12) வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.