
போராட்டத்தின் போது இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளர் ரந்திமல் கமகேவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.
மேலும், சந்தேக நபர் துபாயில் இருந்து இலங்கைக்கு வந்து கொண்டிருந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் குருந்துவத்தை பொலிஸார் சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன டி அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதேவேளை, பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடையங்களை பரிசீலித்த பிரதான நீதவான், சந்தேக நபரை தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளதோடு மேலும், இந்த வழக்கை எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.