
பேருவளை மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி கப்பலொன்றில் 05 பேர் இருந்ததாகவும், குறித்த
கப்பலில் இருந்து கிட்டத்தட்ட 21 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த கப்பல் மிரிஸ்ஸ திவார துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் பல நாள் மீன்பிடி கப்பல் என தெரிய வந்துள்ளது.
அத்தோடு, சந்தேகநபர்கள் மற்றும் ஹெரோயின் கையிருப்புடன் குறித்த கப்பல் தற்போது பேருவளை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.