தேனீக்களைக் குறிவைக்கும் பாக்டீரியாவின் பரவலை கட்டுப்படித்த உலகின் முதல் தடுப்பூசியைப் பயன்படுத்த அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், அமெரிக்காவில் பரவி வரும் பாக்டீரியாவால், 2006 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவில் தேனீ காலனிகள் ஆண்டுதோறும் குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
அதன்படி, தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி தேனீக் கூட்டின் ராணி பகுதியில் செலுத்தப்பட உள்ளது. இது தேனீ இனத்தை பாதிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், மகரந்தச் சேர்க்கையாளர்களாக, தேனீக்கள் சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, தேனீக்கள், பறவைகள் மற்றும் வௌவால்கள் போன்ற மகரந்தச் சேர்க்கைகள் உலகின் பயிர் உற்பத்தியில் 3ல் 1க்கு நேரடியாக பங்களிக்கின்றன என அறிவித்துள்ளது.