
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான 03 ஆவது சுற்று பேச்சுவார்த்தைக்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று இலங்கை வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவுரமன் சுத்தவித்தும் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த பேர்ச்சுவார்த்தையில் , இந்த குழுவினை பிரதிநித்துவப்படுத்தி 26 உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான 03வது சுற்று பேச்சுவார்த்தை நாளையும் நாளை மறுதினமும் கொழும்பில் நடைபெறவுள்ளது.