
உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், சுதந்திர ஜனதா சபை கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எம்.பி., தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் இல்லாத பிரச்சினைகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பது தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும், தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி மத்துகமவில் நடாத்திய பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முதல் கட்டப் போர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என தெரிவித்தார்.