
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மேலும், சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் SQ-468 இல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை 12:00 மணியளவில் வந்தடைந்தார்.
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்தை வரவேற்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறைக்கு வந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.