லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் வதிவிட ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, ஜப்பான் உலகின் சக்திவாய்ந்த வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் நாடாக மாறியுள்ளது.
மேலும், அந்த அறிக்கையின்படி, ஆசியாவின் 03 நாடுகள் உலகின் சக்தி வாய்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் சுட்டெண்ணில் முன்னணியில் உள்ளதாக ஹென்லி & பார்ட்னர்ஸின் கூற்றுப்படி, ஜப்பானிய குடிமக்கள் உலகெங்கிலும் 193 இடங்களுக்கு விசா இல்லாமல் அல்லது விசா இல்லாத அணுகலைப் பெற்றுள்ளனர் என்பதோடு அதே நேரத்தில் வெளிநாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவின் குடிமக்கள் 192 நாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.
அத்தோடு, கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு ஆசிய-பசிபிக் பகுதி சுற்றுலாவிற்கு மீண்டும் திறக்கப்படுவதால், குறித்த குடிமக்கள் மீண்டும் பயண சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் சமீபத்திய வெளியீட்டின் படி, சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில், உலகளாவிய சுற்றுலா இப்போது கோவிட் தொற்றுநோய்க்கு பிந்தைய 75 சதவீதத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், 03 ஆசிய நாடுகளுக்குப் பிறகு, அதிக சக்தி வாய்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளில் முன்னுரிமைப் பட்டியலில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அதிகமா நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன அந்தவகையில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 190 இடங்களுக்கு சுதந்திரமாகச் செல்லலாம் எனவும் அதைத் தொடர்ந்து பின்லாந்து, இத்தாலி மற்றும் லக்சம்பர்க் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 189 நாடுகளுக்குச் செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஆஸ்திரலியா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் ஐந்தாவது இடத்திலும், பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் 6வது இடத்திலும் உள்ளதோடு,பெல்ஜியம், நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் செக் குடியரசு ஆகியவற்றுடன் நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா 7வது இடத்தில் உள்ளதாக ஹென்லி & பார்ட்னர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது,
மேலும், 27 நாடுகள் மட்டுமே முன்கூட்டியே விசா இல்லாமல் நுழைவதை அனுமதிப்பதன் மூலம் ஆப்கானியர்கள் மீண்டும் குறியீட்டின் கீழே உள்ளதாகவும், இலங்கை 100வது இடத்தில் உள்ளதனல் இலங்கை வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவர் உலகில் 42 இடங்களுக்கு மட்டுமே விசா இல்லாமல் அல்லது விசாவுடன் பயணிக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளதாக ஹென்லி & பார்ட்னர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.