
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் தலைமை அதிகாரி குசும்தாச மஹாநாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் விதித்த சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
மேலும், விஜித் மல்லல்கொட, எல்.டி.பி தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சூரசேன, எஸ்.துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, குறித்த சிறைத்தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்துள்ளது.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டு மே மாதம், கந்தளை சீனி தொழிற்சாலையின் இயந்திரங்களை மாற்றுவதற்காக இந்திய நாட்டவர் ஒருவரிடம் 54 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் கோரியதாகவும் மேலும், 20 மில்லியன் ரூபாவை பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட குசுமதாச மஹாநாம என்ற குற்றவாளிக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், 65000 ரூபா அபராதமும் விதித்து மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட பியதாச திஸாநாயக்கவுக்கு 12 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், ஐம்பத்தைந்தாயிரம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்றம் தமக்கு தண்டனை வழங்கிய விதம் சட்டத்திற்கு முரணானது எனவும் எனவே அந்த தண்டனைகளில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் எனவும் கோரி சம்பந்தப்பட்ட பிரதிவாதிகள் உச்ச நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பித்திருந்தனர்.