
ஹன்வெல்ல, கேதனகமுவ பிரதேசத்தில் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், 520 கிராம் ஐஸ் போதைப்பொருள், 204 கிராம் ஹெராயின், எலக்ட்ரானிக் தராசு மற்றும் மூன்று வங்கி புத்தகங்களுடன் குறித்த நபர் கைது செய்துள்ளதுடன் ஹன்வெல்ல உணவக உரிமையாளரின் கொலைக்கு ஆதரவளித்த பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.