
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை தள்ளுபடி செய்வதற்கு சீனாவும் இந்தியாவும் உடனடியாக இணங்க வேண்டும் என தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்தோடு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதியை பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் அவசியம் என பிபிசி உலக சேவைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் ஆனால் இலங்கையின் கடனை குறைக்க சீனாவும் இந்தியாவும் ஒப்புக் கொள்ளும் வரை சர்வதேச நாணய நிதியம் இந்த தொகையை வெளியிடாது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கை பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடனை நிறுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் துரிதமாக செயற்படுவது அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை பயக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து நாட்டில் பணவீக்கம் சற்று குறைந்துள்ள போதிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் உணவுப் பணவீக்கம் 65 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் உள்ள மூன்றில் ஒருவருக்கும் அதிகமானோர் உணவுப் பாதுகாப்பின்றி இருப்பதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 9.2 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளதுடன் 2023ல் பொருளாதாரம் மேலும் 4.2 சதவீதம் சுருங்கும்என்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சீனாவும் இந்தியாவும் கடந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு உடன்பாட்டை எட்டிவிடும் என்றும் இலங்கை எதிர்பார்த்ததாக பிபிசி உலகச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி மாதத்தின் பின்னர் கடன் தொடர்பான உடன்படிக்கை எதிர்பார்க்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும்,தெரிவித்துள்ளார்.