
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் இன்று இரவு முதல் மூடப்பட வேண்டும் என மின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சேமித்து வைக்கப்பட்டுள்ள நாப்தா எரிபொருளை வழங்குமாறு கோரிய போதிலும் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என இலங்கை மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு நிறுத்தப்பட்டால் 165 மெகாவாட் இழப்பு என்ன தேசிய மின் உற்பத்தியில் ஏற்படுவதோடு மின்வெட்டு இன்னும் அதிகமான நேரம் ஏற்படுகின்ற சூழ் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.