
சீனாக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரின் இலங்கை விஜயத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சீனாப் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.
மேலும், சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென் சோ உட்பட 06 பேர் கொண்ட குழுவொன்று இவ்வாறு வருகை தந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய குரு டிவி செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, சீனாப் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 18ஆம் திகதிவரை நாட்டில் தங்கவுள்ளதுடன் சீனாக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அடுத்த வாரம் வருகைதரவுள்ளமையும் குறிப்பிட வேண்டிய விடையமாகும்.