சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதி அமைச்சர் சென் சாவோவினால் அந்த கடிதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கப்பட்டது.
சீனாக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையின் பிரதி அமைச்சர் சென் சாவோ உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (14ஆம் திகதி) சந்தித்த போதே இக்கடிதத்தினை வழங்கியுள்ளார்.
மேலும், இலங்கைக்கான சீனாத் தூதரகம் டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கு சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்துள்ளார்.