
புதிய வருமான வரிக் கொள்கைக்கு எதிராக இலங்கை மின்சார சபையின் 4000 இற்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் கையெழுத்திட்ட மனுவொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதுள்ள வரிக் கொள்கையை நியாயமான முறையில் திருத்தியமைக்காவிட்டால் எதிர்காலத்தில் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.