
யாழ்ப்பாணம், புவக்கரை பகுதியில் நபரொருவரின் கைவிரல் துண்டிக்கப்பட்டு தங்க மோதிரம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இதன்படி, உறவினர் வீட்டுக்கு வந்த இரு திருடர்கள் அவரது விரலில் இருந்து ஒரு மோதிரத்தை கழற்றி விட்டு, கழற்ற முடியாத இடத்தில் மற்றைய மோதிரத்தை அறுத்து தங்க மோதிரத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகின்றது.
அத்தோடு, திருடர்களால் திருடப்பட்ட இரண்டு மோதிரங்களின் பெறுமதி சுமார் இரண்டரை இலட்சம் ரூபா என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.