
பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட மேலும் 03 சந்தேக நபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மேலும், இவர்களில் ஒரு தரகர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இருவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர்களும் கொலன்னாவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 02 கிராம சேவைபி பிரிவுகளில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.