
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பண நிவாரணம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை உரிய பணத்தை வழங்க அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளது.
அத்தோடு, புதிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் முன்மொழிவுகள் தொடங்கும் வரை இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
மேலும், சர்வதேச வர்த்தக அலுவலகத்துக்கான சட்டமூலங்களை தயாரிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.