சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட பூஜ்ஜிய கோவிட் கொள்கை பொருளாதார வளர்ச்சியினை கடுமையாக பாதித்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .
அதன்படி, கடந்த ஆண்டு எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை சீனாவால் எட்ட முடியவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், கடந்த ஆண்டு சீனாவின் ஜிடிபி 3 சதவீதம் வளர்ச்சி கண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள இதேவேளை சீனாவின் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதம் உள்ளதாகவும்எவ்வாறாயினும், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்பார்த்த சதவீதத்தை விட சீனாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், 60 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளதுடன் சீனாவின் தேசிய பிறப்பு விகிதம் எதிர்மறையான 6 மற்றும் 7 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022 ஆம் ஆண்டில், சீனாவின் மக்கள் தொகை 1.4118 பில்லியனாக இருப்பதோடு 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 850,000 குறைவு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.