
13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த சம்மதிப்பதாக சமகி ஜனபலவேக தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறான உண்மையான தேவை இருப்பின் தேர்தலை நடத்தி மாகாண சபைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் செயற்பட வேண்டும் என மகி ஜனபலவேகயின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்ற பிரகடனம் ஜனாதிபதியின் தனிப்பட்ட கருத்தா அல்லது அரசாங்கத்தின் கருத்தா என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.