
முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவது வார்த்தைகளில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இதனால் உள்நாட்டு பயணிகளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்படுவார்கள் என அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களிடம் இருந்து சில டாக்சி சாரதிகள் அநியாயமாக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளதோடு இவ்விடயம் தொடர்பில் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.