
புனர்வாழ்வு முகவர் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இந்த விவாதத்தின் போது சமகி ஜனபலவேக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் காரசாரமான உரையாடல் இடம்பெற்றுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டார்.
அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்கருத்தினை வெளியிட்டபொது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.