
இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக டபிள்யூ.சமரதிவாகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.