
மருந்து தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க சுகாதார திணைக்களங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மீண்டும் மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்கு மக்கள் ஒன்றிணைந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் ஆசியுடன் அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.