
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லெனெஸ்கி, தனது நாட்டில் உள்ள 182 ரஷ்ய மற்றும் பெலாரஸ் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு எதிராக நடத்தப்படும் போர் மற்றும் வெளிநாட்டு உறவுகளைத் தடுப்பதற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதன்படி, உக்ரைனில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் உக்ரைன் அதிபர் கூறியதோடு . அந்த சொத்துக்கள் அனைத்தும் உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லெனெஸ்கி மேலும் தெரிவித்துள்ளார்.