
தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞனை டிபெண்டர் காரில் கடத்திச் சென்று அநியாயமாக அடைத்து வைத்தமை என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. .
மேலும், குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, அரச தரப்பு சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை டிஃபென்டர் காரில் கடத்திச் செல்லப்பட்டு, ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டார் என்ற முறைப்பாட்டிற்க்கான வழக்கு என்பது குறிப்பிடதக்கது.